பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாணவர் பேரவை சார்பில் மகளிர் தின விழா 9.3.2023 காலை 11 மணிக்கு நடைபெற்றது.
மாணவர் புல முதன்மையர் டாக்டர் ரஷீதா வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் சே.மு.அப்துல்காதர் தலைமையுரையாற்றினார். துணை முதல்வர் டாக்டர் எஸ்.எம்.ஏ.செய்யது முகம்மது காஜா வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் ச.மகாதேவன் அறிமுகவுரையாற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணைய|ர்) சுகன்யா, எழுத்தாளர் ஹசீனா செய்யது ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். அமெரிக்கா மற்றும் தமிழகத்தில் வாழும் 20 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத்தொகுதியான “அன்றில் முற்றம்” நூலை சிறப்பு விருந்தினர் சுகன்யா வெளியிட அதன் முதல் பிரதியை எழுத்தாளர் ஹசீனா செய்யது பெற்றுக்கொண்டார்.
தூய சவேரியார் கல்லூரி மக்கள் தகவல்தொடர்பு மற்றும் ஊடகவியல் துறை பேரா.ஜோஸ்பின் பாபா அறிமுகவுரையாற்றினார். எழுத்தாளர்கள் கௌசல்யா ராஜ், வள்ளி, நெல்லை உலகம்மாள், விஜி பூர்ணசிங், ருபீனா ராஜ்குமார் ஆகியோர் தங்கள் எழுத்துலகம் குறித்து உரையாற்றினர். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றிய திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்) சுகன்யா தனது சிறப்புரையில் ” தயக்கத்தை விட்டுத்தள்ளுங்கள்” – மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா பேச்சு. தயக்கத்தை உடைத்துத் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மை நமக்குத் தேவையில்லை. நம் நிறம் நம்முடைய அடையாளம். நிறம் குறித்து ஆழமாக யோசிக்கும்போது நம் தன்னம்பிக்கை . நம் ஆளுமை குறித்த பெருமிதம் நமக்கு வேண்டும். பேச்சு ஒரு ஆளுமை. நான் சொல்ல வேண்டியதை எளிய நடையில் புரிகிற வகையில் பேசுவது ஆளுமை. என்னால் முடியும் என்று எப்போதும் உங்களிடம் சொல்லிக் கொள்ளுங்கள். தேவையில்லா செயலிகளைச் செல்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள். நல்ல புத்தகத்தை வாசியுங்கள். நீங்கள் படிக்கும் நல்ல புத்தகம் உங்கள் வாழ்வை மாற்றும். நாம் புரட்டுவதல்ல புத்தகம், நம்மைப் புரட்டுவதுதான் நல்ல புத்தகம். நிறைய படிக்கும்போதுதான் உங்களால் நிறைய எழுத முடியும். தமிழக முதல்வர் அவர்களின் நான் முதல்வன் திட்டம் உங்கள் திறன்களை மேம்படுத்துகிறது.” என்று பேசினார். மாணவி பாத்திமா ரசீனா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர் பேரவை சிறப்பாகச் செய்திருந்தது.


