தூத்துக்குடி கடலில் படகில் மயங்கி விழுந்து உயிரிழந்த சங்குகுளி மீனவரின் கண்கள் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சேசுவடியான் மகன் சிலுவை (47). இவர், கடந்த நேற்று முன்தினம் சங்கு குளிப்பதற்காக திரேஸ்புரத்தில் இருந்து 5 பேருடன் படகில் கடலுக்குச் சென்றார். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு படகிலேயே மயங்கி விழுந்தாராம். சக மீனவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சிலுவையின் கண்கள் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.


