
சாத்தான்குளம் வட்டார அளவிலான நடந்த விளையாட்டுப் போட்டியில் பன்னம்பாறை கண்ணன் கபடி அணி முதல் பரிசு பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
இளைஞர்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்தவும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் போன்ற வைரஸ் நோய்களின் அச்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக
இந்திய அரசு நேரு யுவகேந்திரா, கெல்வின் சோசியல் சர்வீஸ் சொசைட்டி மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டி சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை கிராமத்தில் நடைபெற்றது.
இதில் இளைஞர் மன்றங்களுக்கான குழு விளையாட்டுப் போட்டியில் கபடி, வாலிபால், கால்பந்து மற்றும் தனிநபர் காண போட்டியில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் , இளம் பெண்களுக்கான குழு போட்டியில் கயிறு இழுத்தல், கோ – கோ பெண்களுக்கான தனிநபர் போட்டியில் மியூசிக்கல் சேர், பந்து கடத்துதல், ஒற்றைக்கால் ஓட்டம் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
கபடி போட்டியில் பன்னம்பாறை கண்ணன் கபடி அணி முதல் பரிசு பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 2வது பரிசை அணி கோகுல் கபடி குழு பெற்றது. வாலிபால் போட்டியில் 7 ஸ்டார் அணி முதல் பரிசையும், கிருஷ்ணன் அணி 2வது பரிசையும் பெற்றன.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் ஜி தேவபிரான், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட நேரு யுவகேந்திரா பல்நோக்கு அலுவலர் ஆர் இசக்கி கருத்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக பன்னம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் ஏ எஸ் எம் அழகேசன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்திப் பேசினார். விளையாட்டு போட்டியின் நடுவராக. வேல் குமார், பி. வேம்புதாஸ்,, ராமன் ஆகியோர் செயல்பட்டனர். இதில் ஸ்ரீ அகத்தியர் லோபமுத்ரா அறக்கட்டளை தலைவர் ஆர். பட்டுவேல், செயலாளர் பி. சண்முகசுந்தரம், சமூக ஆர்வலர் ஏ ஆறுமுகம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விளையாட்டுப் போட்டியில் இளைஞர் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள்,இளம் பெண்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னதாக பன்னம்பாறை இளைஞர் மன்ற தலைவர் சுடலைமுத்து அனைவரையும் வரவேற்றார். முடிவில் தேசிய இளையோர் தொண்டர் ஏ அண்ணாதுரை நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் கெல்வின் சோசியல் சர்வீஸ் சொசைட்டி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.