சாத்தான்குளம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவர் வீட்டில் பணம் திருடியதாக இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை கஸ்பா தெருவைச் சேர்ந்தவர் சித்திரைகனி (60). முன்னாள் ஊராட்சித் தலைவரான இவர் அவரது குடும்பத்துடன் கடந்த மாதம் 30ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருப்பூரில் உள்ள மகனைப் பார்க்க சென்று விட்டனர். பின்னர் கடந்த 2ஆம்தேதி ஊருக்கு திரும்பினார்.
அப்போது வீடு பூட்டி நிலையில் வீட்டின் மேல் ஓடுகள் பிரிக்கப்பட்டு மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே இறங்கி இரும்பு கட்டில் மெத்தைக்கு கீழே வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் குரூஸ்மைக்கில் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தார். அதில் சித்திரைக்கனியின் உறவினரும், அதே ஊரைச் சேர்ந்த சேர்மத்துரை மகன் பெரியமுத்து (22) என்பவர் திருட்டில் ஈடுப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.


