ஏரல் ஆச்சாரிமார் மேலத்தெருவில் அமைந்துள்ள வடபத்திரகாளியம்மன் கோயில் விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
இதில் கவிஞர் ஏரல் ராஜன் இயற்றிய அம்பாள் பாமாலையுடன் கூடிய ஆலயக் குறிப்பின் முதல் பிரதியை,
ஆலய நிர்வாகத்தலைவர் மகாராஜன் ஆச்சாரி வெளியிட, பேராசிரியர்.நல்லையா துரைராஜ் பெற்றுக்கொண்டார்.
சாயர்புரம் சமூக பாடகர் கந்தன் ஆச்சாரி பக்திப் பாடல்களை பாடினார்.
ஆலய அர்ச்சகர் குமார் ஆச்சாரி சிறப்பாக கைங்கர்யம் செய்து பலரது பாராட்டுக்களை பெற்றார்.
மதியம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்/


