ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி மகன் பரமசிவன்(48). இவரும் திருவரங்கப்பட்டியைச் சேர்ந்த வெள்ளப்பாண்டி (65) என்பவரும் கால்வாய் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவன் அருகில் இருந்த கம்பால் வெள்ளப்பாண்டியின் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த வெள்ளப்பாண்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய பரமசிவனை செய்துங்கநல்லூர் போலிசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் அருகில் இருந்தவரை கம்பால் மண்டையில் அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


