மத்திய வருவாய்புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றிவரும் மூத்த நுண்ணறிவு பிரிவு அதிகாரி முரளிக்கு சிறப்பு விருதினை மத்திய வருவாய்துறை செயலர் சஞ்சய் மல்ஹாேத்ரா வழங்கினார்.
இந்தியாவில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு கடந்த 1957ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது இந்த புலனாய்வு அமைப்பின் 67ம் ஆண்டு விழா டெல்லியில் சமீபத்தில் நடந்தது. விழாவுக்கு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு இயக்குநர் எம்கே. சிங் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சுங்க வரிகள் மற்றும் வருவாய்துறை சேர்மன் சஞ்சய்குமார் அகர்வால், ஜிஎஸ்டி உறுப்பினர் செயலர் சஷாங்க் பிரியா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்சியில் கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடல் பகுதியில் இலங்கையில் இருந்து படகில் கடத்திவரப்பட்ட ரூ.13 கோடி மதிப்பிலான 21 கிலோ தங்ககட்டிகளை துரிதமாக செயல்பட்டு, கடத்தல் புள்ளிகளை கைது செய்த வழக்கில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த நுண்ணறிவு பிரிவு அதிகாரி முரளிக்கு சிறந்த அதிகாரிக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.
ஒன்றிய வருவாய்துறை செயலர் சஞ்செய் மல்ஹோத்ரா இதனை வழங்கினார். சிறப்பு விருது பெற்ற அதிகாரி முரளிக்கு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அலுவலர்கள் வாத்துக்கள் தெரிவித்துள்ளனர்.


