இளசை அருணா. தனது கையெழுத்தால் தமிழ் உலகத்தினையே புரட்டி போட்டவர். அவர் “கரிசல் காட்டு கதைகள்” என்ற நூலை தொகுத்ததின் மூலமாக சுமார் 32 கரிசல் காட்டு சிறுகதை எழுத்தாளர்களை அறிமுகம் செய்தவர். அவரின் உழைப்பு, பாரதி மேல் கொண்ட காதல் என்றும் மறுக்க முடியாத ஒன்றாகும். புதுமை பித்தனுக்கு நூற்றாண்டு விழா எடுத்து 100 கவிஞர்களை நெல்லை டவுண் மந்திர மூர்த்தி பள்ளியில் கவிதை வாசிக்க வைத்து சிறப்பு செய்தவர். அவருடைய சிஷ்யர் ஜோல்னா ஜவகர் மூலமாக பாரதியார் விழாவை அனைத்து மாவட்ட தலைநகரிலும் எடுத்தவர். பேச்சுபோட்டி வைத்து, அதில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து எட்டயாபுரத்தில் வைத்து 150 விழாவை எடுக்க காரணமாக இருந்தவர். இளசை அருணா சென்னை சூளைமேட்டில் உள்ள தனது மகள் வீட்டில் வைத்து இறந்தார். அவருக்கு 84 வயது. அவரது நல்லடக்கும் இன்று சென்னையில் வைத்து நடந்தது.


