தூத்துக்குடி தூ. சவேரியார்புரத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், தூ. சவேரியார்புரத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, டிஎம்பி பவுண்டேஷன் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. வங்கியின் தூ.சவேரியார்புரம் கிளைமேளாலர் ஜெபதுரை, டிஎம்பி பவுண்டேசன் அதிகாரி சௌந்திரபாண்டியன், திருக்குறிப்பு தொண்டர் நாயனார் ஆரம்பப்பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் சக்திவேல், பெருமாள், துவக்கி வைத்தார்கள்.
முகாமில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 20 க்கும் மேற்பட்டோர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 70-க்கும் மேற்பட்டோர் இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சவேரியார்புரம் கிளை மேலாளர் மற்றும் ஊழியர்கள், டிஎம்பி பவுண்டேஷன் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


