தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் ஜி- 20 மாநாட்டை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
டெல்லியில் ‘ஜி- 20’ மாநாடு இன்று தொடங்கியது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஜி- 20 தலைவர் பதவியை இந்தியா கொண்டாடும் வகையில் 29 TN இன்டெப் காய் அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ் வழிகாட்டுதலின் கீழ் முத்துநகர் கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களுடன் சுமார் 80 என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் ஜி 20 மாநாட்டின் முக்கியத்துவம் குறித்தும், அதில் நமது நாட்டின் பங்கு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புனீத் சாகர் அபியான் விழிப்புணர்வு பேரணி மற்றும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.


