ஸ்ரீவைகுண்டம் அருகே பொய் வழக்குபதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் முன்னாள் டிஎஸ்பிக்கள் வெங்கடேசன், மாதவன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சந்தையடியூர் தெருவைச் சேர்நதவர் சித்திரைப்பாண்டி. இவர் கடந்த 2004ஆம் ஆண்டில் சேரகுளம் புறக்காவல் நிலையத்தில் பெண் காவலரை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்த விவகாரத்தில் உதவி ஆய்வாளருக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளார். இதனால் சித்திரபாண்டியின் மீது கடந்த 2016 மற்றும் 2017 ஆண்டு பொய் வழக்கு பதிவு செய்ததாக புகார் எழுந்தது.
போலீசாரின் பொய் வழக்கை எதிர்த்து சித்திரைப்பாண்டி நீதிமன்றத்திலும், மனித உரிமை ஆணையத்திலும் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பான விசாரணையின் பேரில் அப்போது ஸ்ரீவைகுண்டத்தில் டிஎஸ்பியாக இருந்த மாதவன், காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளராக இருந்த வெங்கடேசன் கடந்த மாதம் வரை ஸ்ரீவைகுண்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் அப்போது ஸ்ரீவைகுண்டத்தில் பணியாற்றிய காவல் துணை கண்காணிப்பாளர் தற்போது கோவை மாவட்டத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தற்போது இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் பொய் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சித்திரைப்பாண்டிக்கு, காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனிதஉரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சித்திரைப்பாண்டியன் கூறும்போது, போலிசாரால் தாக்கப்பட்டு நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை நீதிமன்றம் முன்பு மயக்கஊசி செலுத்தி நிர்வாணமாக நிற்க வைத்தனர். மேலும் என்னை கடுமையாக தாக்கினர். என அவர் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.


