ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது.
80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் சி சைட் என அழைக்கப்படும் அலெக்சாண்டர் ரியா கடந்த 117 வருடங்களுக்கு முன்பு அகழாய்வு செய்த பகுதியில் 30 செண்டி மீட்டர் ஆழத்தில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டது. ஆதிச்சநல்லூரில் 1902&ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்தபோது தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் நடந்த 4 கட்ட அகழாய்வு பணியில் தங்கம் மற்றும் வெங்கலத்தால் செய்யப்பட்ட பொருள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே தங்கப்பொருள் கிடைத்தது ஆய்வாளர்கள் மத்தியில் ஆர்வத்தினை மேலும் தூண்டியது.
இதற்கிடையில் சுமார் 3 மீட்டர் ஆழத்தில் தோண்டிய போது அங்கே நீளமான ஈட்டி போன்ற ஆயுதம், இடுக்கி போன்ற இரும்பு பொருள் ஆகியவை கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இரும்பு பொருள் மீது படிந்த நெல்லின் படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முதலில் ஆதிச்சநல்லூர் தான் இந்த நெல் படிகம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் உள்ள முதுமக்கள் தாழியில் தங்கத்தால் ஆன 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட தங்கத்தினால் ஆன நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போது கிடைத்த இரண்டாவது தங்கப்பொருள். அதே முதுமக்கள் தாழியில் வெண்கலத்தால் ஆன ஜாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஜாடியில் அலங்காரமாக சுற்றி ஐந்து இடத்தில் ஜாடியின் மேல் கொக்கு, வாத்து பறவைகள் நீர் அருந்துவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகில் 2 வெண்கலத்தால் ஆன வடிக்கட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த குழியில் 20 இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 9 அம்புகள், 1 வாள், 1 ஈட்டி, 1 சூலம், தொங்கவிட்டான் உள்பட 20 பொருட்கள் அடங்கும். எனவே வெண்கலத்தினையும், தங்கத்தினையையும் அகழ்ந்து நமக்கு தந்து கொண்டிருக்கும் ஆய்வாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் தொல்லியல் மண்டல இயக்குனர் அருண்ராஜ் மற்றும் ஆய்வாளர் யத்தீஸ்குமார் மற்றும் தொல்லியல் குழுவினரை பாரட்டியுள்ளார்.
தொல்லியல் ஆர்வலர்கள் சார்பிலும் ஆய்வாளர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இந்த நிகழச்சிக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு த¬லைமை வகித்தார். முனைவர் கந்தசுப்பு முன்னிலை வகித்தார். வரலாற்ற துறை ஆசிரியர் சிவகளை மாணிக்கம், ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரி வரலாற்று துறை தலைவர் முனைவர் லோ. சங்கீதா, தமிழத்துறை இணைப்பேராசிரியர் முனவைர் க . சுப்பு லெட்சுமி, உதவிப்பேராசிரியர் முனைவர் புஷ்பக வல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


