சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீசுந்தராட்சி அம்மன், ஸ்ரீதடிக்கார சுவாமி கோயில் கொடை விழா 2நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் மாலை புனவைகல் தீர்த்தம் எடுத்து அழைத்து வருதல், தொடர்ந்து கும்பம் ஏற்றுதல், இரவு மாக்காப்பு. சாஸ்தா பிறப்பு தீபாதாதனை, 2ஆம் நாள் பேய்க்குளம் ஸ்ரீசங்கரலிங்க சுவாமி உடனுறை ஸ்ரீகோமதி அம்பாள் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல். மதியம் கொடை விழா,தீபாராதனை, மதியம் சிறப்பு அன்னதானம், மாலை சிறப்பு பொங்கல் வழிபாடு, இரவு அலங்கார தீபாராதனை, 12மணிக்கு சாமக்கொடை, படப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.


