சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், டிவிஎஸ் ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை சார்பில் பேய்க்குளம் கணபதிநகர் அங்கன்வாடி மையத்தில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் குழந்தைகளுக்கு கை கழுவும் முறைகள் குறித்து சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ். மகேஸ்குமார் ஆகியோர் செய்முறை விளக்கம் அளித்தனர். செவிலியர் மகேஸ்வரி , குழந்தைகள் ஊட்டசத்து உணவு சாப்பிடுவது குறித்து விளக்கம் அளித்து பேசினார். இதில் ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை பணியாளர்கள் இசக்கிமுத்து, சுவேதா, அங்கன்வாடி மைய பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


