திருவைகுண்டம் பணிமனையில் சிஐடியு சங்கத்தின் கமிட்டி கூட்டம் வியாழன் இன்று மாலை 4 மணிக்கு சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு பணிமனை துணைத் தலைவர் தோழர் முத்துசாமி தலைமை தாங்கினார். முதல் நிகழ்ச்சியாக அஞ்சலி பணிமனை நடத்துனர் தோழர் இசக்கி வேல் மற்றும் ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. செயலாளர் சிவசப்பு நடைபெற்ற பணிகள் மற்றும் பணிமனை பிரச்சனைகள் குறித்து பேசினார். மத்திய சங்க முடிவுகள் குறித்து சம்மேளன குழு உறுப்பினர் தோழர் சங்கிலி பூதத்தான் பேசினார். நிறைவாக நெல்லை மண்டல பொதுச் செயலாளர் தோழர் எஸ் .ஜோதி நிறைவுரையாற்றினார். பணிமனை பொருளாளர் தோழர் சண்முகவேல் நன்றி கூறினார். கூட்டத்தில் பேசப்பட்ட கிளை பிரச்சனைகள் குறித்து தொகுத்து கிளை மேலாளர் இடம் வழங்கவும் அதன்பின் அது குறித்தான போராட்டம் நடத்தவும் தீர்மானம் இயற்றப்பட்டது . கூட்டத்தில் கிளை நிர்வாகத்தின் செயல்பாடுகள் அதிருப்தி மற்றும் பணிமனை பிரச்சனைகள் அதிக வேலப்பளு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் தோழர்கள் கணேசன், ஜீவானந்தம், ஆறுமுகம் ,ராமமூர்த்தி, உலகநாதன், சின்னச்சாமி, சங்கர பாண்டியன், சண்முகசுந்தரம் மற்றும் நெல்லை மண்டல பொருளாளர் தோழர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்


