ஆழ்வார்கற்குளத்தில் சித்த மருத்துவ முகாம் நடந்தது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கிள்ளிகுளம், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ஆழ்வார்கற்குளத்தில் சித்த மருத்துவ விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் செல்வகுமார் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும் சித்த மருந்துகள் என்ற தலைப்பில் உரையாற்றினார், மேலும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் ரஜினி மாலா செய்திருந்தார். முடிவில் மருந்தாளுனர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


