தாமிரபரணி நதிக்கரை நாகரீகம் நயத் தக்க நல் பழமை நாகரீகமாகும் என ஆதிச்சநல்லூர் ஏரலை அடுத்துள்ள சிவகளை, கொற்கை அகழ்வாராய்ச்சி முடிவுகள் அறுதியிட்டு கூறுகின்றன! தாமிரபரணிக்கரை வாசிகளான சாத்தான்குளம் இராகவன்,முத்தாலங்குறிச்சி காமராசு மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இது குறித்தான விரிவான பதிவுகள் அடங்கிய நூல்களை வெளியிட்டு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்! இந்த ஆண்டு சென்னை புத்தக காட்சியிலும் சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டிருந்தது!.கண்காட்சியை பார்வையிட்டு எமது மண்ணின் புகழ் பரப்பும் நல் நூல்களை வாங்கி வந்து படித்து மகிழ்ந்தேன்!! நன்றி…


