ஆழ்வார்திருநகரி ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் ஆழ்வார் தோப்பு கிராம உதயம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். ஓய்வு பெற்ற பி.டி.ஓ வெங்கடாச்சாரி, தன்னார்வ தொண்டர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார். நிகழ்ச்சியில் பகுதி பொறுப்பாளர்கள் கண்ணன், ஆறுமுகவடிவு, பிரேமா, ஆனந்த செல்வன், செல்வன் துரை, விஜய் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜெயபார்வதி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் நிதி உதவியுடன் மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் மற்றும் சங்கரா கண் மருத்தவமனை இனைந்து நடத்தியது.


