திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவின் ஏழாம் நாள் – சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டு சுவாமி தரிசனம்*
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது
12 நாட்கள் நடைபெற கூடிய இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும் அம்பாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி காட்சி அளித்து வந்தார்
மாசித் திருவிழாவின் 7 ஆம் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 5.30 க்கு உருகு சட்ட சேவையும் நடை பெற்றது.
தொடர்ந்து சரியாக சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் 9.15மணி அளவில் சண்முக விலாஸ் மண்டபத்தில் இருந்து குளிர்ச்சி தரும் வெட்டி வேர் சப்பரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் எழுந்தருளினார். நேர் மறை எண்ணங்களையும் செல்வ வளத்தை யும் தந்திடும் வெட்டி வேர் அலங்காரத்தில் உற்சவர் சன்முகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற பக்தர்களின் அரோகரா கோசங்களுக்கு மத்தியில் ,பக்தர்களுக்கு உற்சவர் சண்முகர் தற்போது வள்ளி தெய்வானை அம்பாளுடன் காட்சி அளித்து வருவதை நம்மால் பார்க்க முடிகின்றது.
இதனையடுத்து சுவாமியும் அம்பாளும் தூண்டிகை விநாயகர் கோவில் அருகேயுள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு வந்தடைந்த பின்பு அங்கு அவருக்கு பால் மஞ்சள் விபூதி உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது பின்னர்அலங்கார தீபாராதனை யும் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து
சரியாக மாலை 4.30 மணி அளவில் சுவாமி ஷண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து செம்மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் சிவன் அம்சத்தில் எழுந்தருளி எட்டு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார் . இதிலும் ஏராளமான உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ள வெளியூர் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமியை வழிபட உள்ளனர்.


