திருச்செந்தூர் அருகே நண்பர் இறந்த சோகத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாலாட்டின்புதூர், காட்டு ராமன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்த பெருமாள் மகன் சத்யராஜ் (35). இவர் திருச்செந்தூர் அருகே உள்ள கீழ நாலு மூலை கிணறு கிராமத்தில் தனது அண்ணன் வீட்டில் தங்கியிருந்து திருச்செந்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் லேப் டெக்னிஷனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் இவரது நண்பர் சுடலை குமார் என்பவர் இறந்துவிட்டார். இதனால் அவரது நினைவாகவே இருந்த சத்யராஜ் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அவரது உடல் பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


