Bottles with potions. Poison. Hand drawn illustration converted to vector.
தூத்துக்குடி முள்ளக்காடு ராஜிவ் நகரை சேர்ந்தவர் வேல்மணி மனைவி பால் தங்கம் (80). இவர் ஏரல் சேர்மன் கோவில் அருகே காட்டுப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வயது மூப்பு காரணமாக தன்னை பார்த்துக் கொள்ள ஆள் இல்லையே என்ற ஏக்கத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


