தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தில் மலைப்பார்வதி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இன்று மாட்டுவண்டிகள் பந்தயம் நடந்தது.
பெரிய மாட்டு வண்டிகள், சிறிய மாட்டு வண்டிகள், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் என நான்கு பிரிவுகளாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 17 பெரிய மாட்டு வண்டிகள், 20 சிறிய மாட்டு வண்டிகள், 21 பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள், 10க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.
போட்டிகள் மணக்கரை கிராமத்தின் கீழ்புறத்தில் இருந்து வல்லநாடு பகுதி வரை தூரம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த போட்டியை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தொடங்கி வைத்தார். காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதனை காண அருகில் உள்ள பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை 500க்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.