மணக்கரை மலை பார்வதியம்மன் கோயில் கொடை விழா நடந்தது . தாமிரபரணி ஆற்றங்கரையில்
வல்லநாடு அருகே உள்ளது மணக்கரை மலை. இந்த மலை மீது அமர்ந்து அருள் புரியும் தாய்
தெய்வம் பார்வதியம்மன். இவரை மலை பார்வதி அம்மன் என்று அழைப்பர். தை மாதம் கடைசி செவ்வாய்
கிழமை இந்த கோயிலில் கொடைவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தாமிரபரணி ஆற்றில்
இருந்து யானை மீது ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அதன் பின் மலை மீது பக்தர்கள்
பரவசமாக ஏறிச்சென்று அம்மனுக்கு நீராட்டு நடத்தினர். தொடர்ந்து அபிசேகம் அலங்காரம் நடந்தது.
அதன் பின் நீண்ட வரிசையில் நின்று அம்மன் தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் பெங்கல் இட்டு
அம்மனுக்கு படைத்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. இரவு கொடைவிழா நடந்தது. புதன் கிழமை இந்த
கோயில் கொடை விழாவை யட்டி மாட்டு வண்டி போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


