தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியில் முதல் 3 இடங்களை பெற்று வெற்றி பெற்றனர். அவர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரியின் சார்பில் 13 மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் முதல் பரிசு செல்வா மாடத்தி (2ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்) ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ஜெசி சாரா (கம்ப்யூட்டர் சயின்ஸ்) ரூ.5 ஆயிரம், 3வது பரிசு பலமுருகேஷ் ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசு வென்றனர். அவர்களுக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் தர்ஷினி அருண் பாபு, பொது மேலாளர்கள் குமார், ஜெயக்குமார் மற்றும் கல்லுரி முதல்வர் முனைவர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் ஆகியோர் பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் கீதா மற்றும் நிர்வாக மேலாளர் முனைவர் விக்னேஷ் செய்திருந்தார்.


