நாசரேத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி பேராசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் டேனியல் தெருவைச் சோ்ந்தவா் செந்தில் முருகன் (60). நகைத் தொழிலாளி. இவருடைய மகள் வேளாங்கண்ணி (28). திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தாா். இவருக்கும் அதே கல்லூரியில் பணி புரியும் ஈரோட்டைச் சோ்ந்த யுவராஜுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு செப். 9ம் தேதி திருமணம் நடக்க இருந்தது.
இந்நிலையில், நேற்று காலை வேளாங்கண்ணி தனது வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம். அவரை உறவினா்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து செந்தில்முருகன் அளித்த புகாரின் பேரில் நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.


