நாசரேத்தில் ஆசிரியை கணவா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் கொா்னோலியஸ் தெருவைச் சோ்ந்தவா் தபராஜ் ஜாண்சன் (52). சமூக சேவகா். இவரது மனைவி ரெபேக்காள் (50) ஆனந்தபுரத்தில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் ரெபேக்காள் பணி முடிந்து வீடு வந்தபோது படுக்கை அறையில் அவரது கணவா் உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் நாசரேத் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


