திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் 4ஆம் வெள்ளிக்கிழமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆத்தூர், ஆறுமுகநேரி, மணப்பாடு, உடன்குடி திருவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் தாலுகாவை சுற்றியுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயனடைய ஏதுவாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் நான்காம் வெள்ளிக்கிழமையில் (மாதம் ஒரு முறை) மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் சிறப்பு மருத்துவர்களை கொண்ட குழு மூலம் நடைபெற உள்ளது.
எனவே திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட கைகால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், காது கேளாதோர், மனவளர்ச்சிகுன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர்; இவ் வாய்பினை பயன்படுத்திக்கொண்டு அடையாள அட்டை பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்மாதம் மருத்துவ முகாம் 22.04.2022 நான்காம் வெள்ளிகிழமை அன்று காலை 10.00 மணிக்கு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


