தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 74.81 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யப் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்களால் இன்று (08.04.2026) வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார்.
பறிமுதல் மற்றும் விடுவிப்பு விவரங்கள்:
உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கத் தொகை: ரூ. 74,81,696
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு: ரூ. 4,89,827
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு: ரூ. 8,74,390
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து விடுவிக்கப்பட்ட மொத்த ரொக்கத் தொகை: ரூ. 69,12,946
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து விடுவிக்கப்பட்ட இலவசப் பொருட்களின் மதிப்பு: ரூ. 4,06,200/-
மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி பெருந்தொகையையோ அல்லது பரிசுப் பொருட்களையோ கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.


