தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கோவில் தெருவை சேர்ந்தவர் பெயிண்டர் ஈஸ்வரமூர்த்தி.
இவரை நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த பிச்சைமணி மகன் பெரியசாமி மற்றும் இவரது மனைவி உமா ஆகியோர் முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து இன்றைய தினம் ஈஸ்வரமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி மற்றும் உமாவை தேடி வருகின்றனர்.


