சாத்தான்குளம் அருகே அரளி விதையை அரைத்துக் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சுண்டங்கோட்டை, பள்ளிப்பத்து நடுத் தெருவைச் சோ்ந்தவா் வா. ஆனந்தராஜ் (62). விவசாயி. இவருக்கு மனைவி மகன், 3 மகள்கள் உள்ளனா். இதில் 3ஆவது மகள் தா்ஷினி (23) வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில் அவா், வீட்டில் யாரும் இல்லாதபோது அரளி விதையை அரைத்துக் குடித்து மயங்கி விழுந்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் நேற்று உயிரிழந்தாா். இதுகுறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.


