
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலராக வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 109 பெண்கள் உட்பட 133 பேருக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2020ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் தீயணைப்புத்துறை வீரர் ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 109 பெண்கள் உட்பட மொத்தம் 133 பேர் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலராக வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்வானவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி குழந்தைகள் மற்றும் பெணகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி அவர்கள் இன்று (08.03.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கி சிறப்பாக பணியாற்றவேண்டும் என்று வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் அருணாச்சலம், அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரியப்பன், செல்வக்குமார், மற்றும் அமைச்சுப் பணி உதவியாளர் பெரியசாமி ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.