உலக மகளிர் தின மாநாட்டில்
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் நடந்த உலக மகளிர் தின மாநாடு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கில் பெண்கள் உயர் கல்விக்கென மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் “புதுமைப்பெண் திட்டத்தை” அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டி நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சொக்கன்குடிப்பு அருகே உள்ள அதிசய மணல் மாதா ஆலய வளாகத்தில் வைத்து மதர் சமூக சேவை நிறுவனம், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் மற்றும் மதர் பனைப் பொருள் உற்பத்தியாளர் மகளிர் குழுக்கள் கூட்டமைப்பு சார்பில் உலக மகளிர் மகளிர் தின மாநாடு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
விழாவிற்கு வருகை தந்தவர்களை மதர் பனை பொருள் உற்பத்தியாளர் மகளிர் குழுக்கள் கூட்டைப்பு நிர்வாகி ஜெப செல்வி அனைவரையும் வரவேற்றார். மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார்.
மதர் பனை பொருள் உற்பத்தியாளர் மகளிர் குழுக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழ்ச்செல்வி, சக்திகனி, ஆலிஸ் மேரி, சுடலைமுத்துகனி, சிவசக்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி குத்து விளக்கேற்றி மகளிர் தின கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு அமைச்சகத்ததின், கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையத்ததின், மத்திய பனைவெல்லம் மற்றும் பனை பொருள்கள் நிறுவனத்தின் மாநில உதவி இயக்குனர் பிரபாகரன் கலந்து கொண்டு பேசியதாவது : . பெண்கள் மேம்பாடு அடைவதற்கு அனைத்து பெண் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும், பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும், சுய சிந்தனையாளராக மாற வேண்டும், மூடநம்பிக்கையிலிருந்து விடுபட வேண்டும், பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் ஜாதி, மதம் என்ற மதில்சுவர்களை தகர்க்க வேண்டும், சமூகத்தில் ஆணும் , பெண்ணும் சரி நிகர் சமானம் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும், கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானதாக இருத்தல் வேண்டும், பெண்களுக்கு சொத்துரிமை உட்பட எல்லா உரிமைகளும் வழங்கப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது அது தடுக்கப்பட வேண்டும், பெண்களை விரும்பியபடி எல்லாம் சுலபமாக கையாள முடியும் என்ற ஆண் மனோபாவ சிந்தனை, உடல் ரீதியிலும், கருத்து ரீதியிலும், பெண்களை அடிமைப்படுத்தவும்,கொடுமைப்படுத்தவும் காரணமாகி விடுகிறது. இதனை தடுக்க வேண்டும். மேலும் நமது இந்திய சமூகம் உண்மையிலேயே ஆணாதிக்க சமூகமாக இருந்து வருகிறது. ஆண் உயர்ந்தவன். பெண் எல்லா நிலைகளிலுளும் தாழ்ந்தவள் எந்த நச்சு கருத்து சமூக மனப்பான்மையாக இருந்து வருகிறது. அதை தூக்கி எறிய வேண்டும் என பிரபாகரன் கூறினார்.
மேலும் மகளிர் வாழ்வில் வளம் பெற தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள கீழ்க்கண்ட திட்டங்களை வரவேற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
* பெண்கள் உயர்கல்விக்கென மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் புது பெண் திட்டத்திற்கும்
*மகளிர் சுய உதவி குழுவிற்கு 45 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கியதற்கு
*ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் 84 ஆயிரம் புதிய சுய உதவி குழுக்கள் தொடங்கும் திட்டத்தையும்
*இளைஞர்கள் திறன் மேம்பாட்டு திட்டத்தையும்
*பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் இத்திட்டத்தில் சுய உதவிக் குழு பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தியதற்காகவும்
*மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 11,178 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பங்களிப்பை ஏற்படுத்தியதற்காகவும்
*பெண்களின் ஊட்டச்சத்தினை உறுதி செய்திட 11 லட்சம் மரக்கன்று வழங்கப்பட்டு 4 லட்சம் வீடுகளில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்கப்பட்டதற்கு
*6000 சமுதாயப் பண்ணை பள்ளிகள் மூலம் 2 லட்சம் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சிகள் போன்ற அனைத்து திட்டங்களிலும் மகளிருக்கு வாய்ப்பு தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இந்த மகளிர் தினம் மாநாட்டின் மூலம் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் தற்போது 70 வது பிறந்தநாளை கொண்டாடிய மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மத்திய பனைவெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவன அலுவலர் ஆறுமுகம், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜ்கமல், மதர் பனைப்பொருள் உற்பத்தியாளர் மகளிர் குழுக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மதர் பனைப்பொருள் உற்பத்தியாளர் மகளிர் குழுக்கள் கூட்டமைப்பு நிர்வாகி தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்


