நடிகர் சார்லி வாழ்த்துப்பதிவு நடிகர் சார்லி அவர்கள்
நடிகர் சார்லி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி ஊரைச் சேர்ந்தவர்
1982ல் CV.ராஜேந்திரன் அவர்கள் இயக்கத்தில் #இளையதிலகம்பிரபுஅவர்கள் மற்றும் நடிகர் மோகன் அவர்கள், நடிகை சுஹாசினி அவர்கள் நடித்து வெளிவந்த #லாட்டரிடிக்கட் படத்தின் மூலம் தமிழ் திரைக்கு நடிகராக அறிமுகமானார். அண்ணே அண்ணே படத்திலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.
1983ல் K.பாலசந்தர் அவர்கள் இயக்கிய பொய்க்கால் குதிரை படம் மூலம் முக்கிய காமெடி நடிகராக நடித்துள்ளார்.
பூ விலங்கு, எனக்குள் ஒருவன், அச்சமில்லை அச்சமில்லை, ஓடங்கள், நட்பு, உயிரே உனக்காக, புது வசந்தம், மணமகளே வா, உன்னைச் சொல்லி குற்றமில்லை, வருஷம் 16, ராஜா கைய வச்சா, உத்தம புருஷன், ப்ரண்ட்ஸ், கோபுர வாசலிலே, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, மெய், கூர்க்கா, தீர்ப்புகள் விற்கப்படும், தனுசு ராசி நேயர்களே, உடன் பால் உள்ளிட்ட 800 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
நடிகர் சார்லி அவர்கள் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் சார்லி அவர்கள் மிமிக்ரி கலையிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் anchorஆக இருப்பதிலும் திறமை வாய்ந்தவர்.
மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் M.A., காரைக்குடி அழகப்பா கல்லூரியில் M. A. Philosophy மற்றும் தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழகத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
மிமிக்ரி கலைஞர் மற்றும் டப்பிங் குரல் கலைஞர் மற்றும் குணசித்திர, காமெடி, வில்லன் என பலதரப் பட்ட வேடங்களில் நடித்துள்ளார்.
#நடிகர்சார்லி அவர்களுக்கு #Mukthafilms60குழு சார்பில் இன்று (6.3.2023) இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்????????


