தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அப்பகுதியில் காவல்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜூ தலைமையில் இன்று நடந்தது.
இந்த பேரணி சாத்தான்குளம் பஜாரில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் போலிசார் அணிவகுத்து சென்றனர். இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட போலிசார் கலந்து கொண்டனர்.
அப்போது சாத்தான்குளம் பஜார் பகுதியில் காவல்துறையினர் பேரணி வந்தபோது வாகன விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவரை பேரணியாக வந்த காவல்துறையினர் மீட்டு தண்ணீர் கொடுத்து அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களின் உதவியோடு அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழிப்புணர்வு பேரணியாக சென்ற காவல்துறையினர் விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சாத்தான்குளம் போலீசாரை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.