ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல்நிலையம் முன்பு தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு பேரணி தொடங்கியது.
வருகின்ற 19ந் தேதி நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறை தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் பேருராட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு பேரூராட்சி தேர்தல் நடைபெற உள்ள 18 வார்டுகளிலும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றவும் காவல்துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி இன்று ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு நடந்தது. இந்த பேரணியை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.
இந்த பேரணி ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் 18 வார்டு பகுதியிலும் உள்ள வேதகோவில் தெரு, யாதவர் தெரு, கோவில்பத்து தெரு பெரும்பத்து தெரு, கம்மாளர் தெரு, சன்னதி தெரு, அம்பலத்தெரு திருவள்ளுவர் தெரு, போஸ்ட் ஆபிஸ் தெரு ஆகிய தெருக்கள் வழியாக வழியாக சென்று மீண்டும் அனைத்து மகளிர் காவல்நிலையம் முன்பு வந்து நிறைவடைந்தது.
இந்த கொடி அணிவகுப்பில் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ், அருள், மேரிஜெமிதா, மணிவண்ணன், ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார், ராஜா ராபர்ட் ஏரல் இன்ஸ்பெக்டர் மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட 60 பேர் கலந்து கொண்டனர்.