தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி ஏரல் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரிஜெமிதா, உதவி ஆய்வாளர் ராஜாமணி மற்றும் காவலர்கள் நேற்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டாரவிளை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 40 கிலோ எடையுள்ள 10 மூட்டைகள் ரேஷன் அரிசி இருப்பதும், அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த ஸ்ரீவைகுண்டம் பராக்கிரமபாண்டி ஊரைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவரை கைது செய்து, சரக்கு வாகனத்தையும் 10 ரேசன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.