தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணிக்கரை அருகே உள்ள உள்ள முத்தாலங்குறிச்சியே சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகன் மணிகண்டன் என்பவர் எம்பிஏ படித்து நதிக்கரை எனும் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் மேலக்குளம் பகுதியை சேர்ந்த அகிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அகிலா பிகாம் படித்துள்ளார்.
திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி முத்தாலங்குறிச்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்களுக்கு மாமரக்கன்று, நெல் நாற்று, கொய்யா, புளியமரகன்று உள்பட 50 வகையான மரக்கன்றுகளை திருமண வரவேற்புக்கு வந்த 500 பேருக்கு வழங்கி பசுமை குறித்தும் மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் கலந்து கொண்ட உறவினர்கள் மரங்களை அன்புடன் தம்பதியினர் கையால் பெற்றுக் கொண்டனர். தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய தம்பதியினரை உறவினர்களும் பொதுமக்களும் வாழ்த்தினர்.