ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் முன்பு உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பேரூராட்சி கழக தேர்தல் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன், தொழிலதிபர் ஏ.பி.சண்முகசுந்தரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில், அதிமுக நகர செயலாளர் காசிராஜன், முன்னாள் நகர செயலாளர் சண்முகசுந்தரம், கிளை செயலாளர் இருளப்பன், ஆப்பிள் ராமசாமி, எஸ்டிடி ரவி, வொர்க் ஷாப் ரவி, மகாராஜன், சுந்தர், திருமாள் அண்ணா தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் பொன்ராஜ், வார்டு செயலாளர்கள் பெருமாள், பிச்சையா, அய்யனார், மாரியப்பன், கடிகாரம் துரை, பிரேம்குமார், திருமால் மாரியப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.