தூத்துக்குடியில் அன்னை பரதர் நல தலைமைச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடியில் அன்னை பரதர் நல தலைமைச் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் சேவியர் வாஸ், துணைத் தலைவர் ராஜ், பொதுச் செயலாளர் பாஸ்கர், செயலாளர் ரீகன், பொருளாளர் கேஸ்ட்ரோ ஆகியோர் கலைஞர் அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்வின்போது திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராபர்ட் வில்லவராயர், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்


