ஆழ்வார்திருநகரியில் நகர்புற உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு போலிசார் அணிவகுப்பு நடந்தது.
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலிசார் தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில் போலிசார் சார்பில் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பு ஆழ்வார்திருநகரி பஜாரில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதே இடத்திற்கு வந்தது. இதில் உள்ளூர் போலிசார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த அணிவகுப்பில் இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீவைகுண்டம் அன்னராஜ், ஆழ்வார்திருநகரி மணிவண்ணன், ஏரல் மேரிஜெமிதா, குரும்பூர் ராமகிருஷ்ணன், செய்துங்கநல்லூர் அருள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.