தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக டிசம்பர் 10ஆம் தேதி அன்று கோவில்பட்டியில் வைத்து மாலை 5 மணி அளவில் மாற்றத்திற்கான மாநாடு நடைபெற இருக்கிறது இந்த மாநாட்டில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் மாநாடு சம்பந்தமாக கருங்குளம் வடக்கு ஒன்றிய சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 06-12-22 செவ்வாய்க்கிழமை அன்று தெய்வச் செயல் புரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது
இந்த கூட்டம் ஒன்றிய தலைவர் நங்கமுத்து தலைமையிலும் மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு முன்னிலையிலும் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பேச்சி, முருகன், ராமலிங்கம், முத்து, மாரிமுத்து, ஆவுடையப்பன் ,பேச்ச முத்து, மணிகண்டன், பால்துரை ஆகியோர் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் மாநாட்டிற்கு ஒவ்வொரு சக்தி கேந்திரத்திற்கும் இரண்டு வாகனத்தில் நிர்வாகிகளை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. ஒன்றியத்தின் சார்பாக சுமார் 500 நபர்கள் இந்த மாற்றத்திற்கான மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்


