திருவைகுண்டம் அருகே கொங்கராயக்குறிச்சி சிவன்கோவிலில் திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவைகுண்டம் அருகே கொங்கராயக்குறிச்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வீரபாண்டீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. அம்பாள் பொன்னுறுதியாகவு,பைரவர் சட்டநாதராகவும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சட்டநாதர் மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பதால் இவ்வூர் தென் சீர்காழி என்னும் போற்றப்படுகிறது.
இவ்வாலயத்தில் காலை, மாலை என 2 கால பூஜைக்கு நடைபெற்று வருகின்றது. இதுதவிர பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, விளக்கு பூஜை போன்றவையும் நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று திருக்கார்த்திகை திருநாள் என்பதால் வீரபாண்டிஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


