மிகவும் பழமையான சிவன் கோயில் செய்துங்கநல்லூரில் உள்ள சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தினை தென் சிதம்பரம் என்றழைப்பர். இந்த கோயிலில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பக்தர்களால் திருப்பணி செய்யப்பட்டு, கொடி மரம், பள்ளிஅறை, நாயன்மார்கள் சிலை அமைக்கப்பட்டு சிறப்பான வழிபாடு நடந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் பல ஆண்டுகள் நடக்காமல் இருந்த 10நாள்திருவிழா உள்பட அனைத்து திருவிழாக்களும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் இந்த ஆலயத்துக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு முதல் திருவண்ணாமலையை போலவே 10 நாள் கார்த்திகை திருவிழா நடத்த ஆன்மீக பேரரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதையட்டி கடந்த 27 ந்«தி முதல் வருகிற 6 ந்தேதி வரை தினமும் 10 தினங்களுக்கு தினசரி மலை 5 மணியிலிருந்து கும்ப பூஜை, அபிசேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, சுவாமி அம்பாள் உள் பிரகார புறப்பாடு நடந்து வருகிறது. இதில் முதல் நாள் லெட்சுமி ஸ்வீட்ஸ் கணேசனும், இரண்டாம் நாள் எம்.ஆர்.எப் டயர்ஸ் டீலர் கிருஷ்ணசாமியும், மூன்றாம் நாள் காய்கனி வியாபாரம் மகாராஜனும் , நான்காம் நாள் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் முத்துப்பாண்டியும், ஐந்தாம் நாள் வெங்கடேஸ்வரா ரைஸ்மில் மகாலிங்கமும், ஆறாம் நாள் காண்ட்ராக்டர்ஆறுமுகபெருமாளும், ஏழாம் நாள் பால்பண்ணை முருகனும், எட்டாம் நாள் போஸ்ட் மேன் சேதுராமலிங்கமும், ஒன்பதாம் நாள் வைத்தியர் மின்னல் ராஜ்ம், பத்தாம் நாள் குரு மகால் மாரியப்பனும் கட்டதளைதாரர்களாக இருந்து பூஜை கைங்கர்யத்தினை செய்து வருகிறார்கள்.
இதற்கிடையில் கோயிலில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தினை ஏந்தியபடி அர்ச்சகர் வர ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் உள் பிரகாரத்தில் விதி உலாவந்தார்கள். இந்த நிலையில் திருக்கார்த்திகை திருநாள் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் வி.கோவில்பத்து சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆன்மிக பேரரவை செய்து வருகிறது. பூஜை யை அர்ச்சகர்கள் முத்துராமன் தலைமையில் அர்ச்சகர்கள் செய்து வருகிறார்கள்.


