தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதாளிகுளத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் செங்கல்பட்டில் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று கொம்பன்குளம் பகுதியில் நடந்த குடும்ப விழாவிற்கு வந்துவிட்டு, பின்னர் அவர் சொந்த ஊரான ஆதாளிகுளத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது செட்டிகுளம் பகுதியில் எதிரே வந்த ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பேருந்து சுரேஷின் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சுரேஷ் படுகாயம் அடைந்தார். உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருககு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியில் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனியார் பள்ளியின் வாகனம் மோதி மளிகை கடையில் பணியாற்றியவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


