தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள மணக்கரை வடக்கு தெருவைச் சேர்ந்த குமாரசாமி மனைவி ராமலட்சுமி (50). இவரிடம் நேற்று இவரது மூத்த மகனான அதே பகுதியைச் சேர்ந்த குமாரசாமி மகன் பேச்சிமுத்து (34) என்பவர் பணம் கேட்டுள்ளார். அதற்கு ராமலட்சுமி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பேச்சிமுத்து ராமலட்சுமியின் வீட்டில் உள்ள குடம் மற்றும் கதவுகளைச் சேதப்படுத்தி ராமலட்சுமியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ராமலட்சுமி அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து பேச்சிமுத்தை கைது செய்தார்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி பேச்சிமுத்து என்பவர் மீது முறப்பநாடு காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


