மாணவர்களுக்கு தொலைநோக்கி பயிற்சி
திருநெல்வேலி அஸ்ட்ரோ சயின்ஸ் கிளப் சார்பில் உலக விண்வெளி வார விழா வ உ சி நகர் ஒயாசிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் அறிவியல் மற்றும் விண்வெளி கருத்துக்களை கொண்டு செல்வதற்கு உலகம் முழுவதும் அக்.4ம் தேதி முதல் அக்-10ம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கடைபிடிக்கப்படுகிறது. முதன் முதலில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக் ஏவப்பட்ட தினம் அக் – 4,விண்வெளி ஆய்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட தினம் அக் -10,
இதனை முன்னிட்டு விண்வெளி வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
நெல்லை கே டி சி நகர் ஒயாசிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு வான் பொருட்களை டெலஸ்கோப் மூலம் பார்வையிடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஒயாசிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் வசந்தா ரூபி ஜேம்ஸ் தலைமை வகித்தார்.
திருநெல்வேலி அஸ்ட்ரோ சயின்ஸ்கிளப் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். பள்ளி தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர்ஆசிரியை திருமதி பிரேமா அனைவரையும் வரவேற்றார்.
தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் தலைவர் எழிலன்,தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநிலசெயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உலக விண்வெளி வார விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி வான் பொருட்களை ட டெலஸ்கோப் பயிற்சி அளித்தனர்.
இதில் ஆசிரியர்கள் பெரியதுரை திருமதி செலினாஸஉள்பட பல ஆசிரியர்கள்,மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பெரியது ரை நன்றி கூறினார்.


