நரேன் (அக்டோபர் 7, 1979) மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். அதனை தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.


