செய்துங்கநல்லூரில் பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் தவ்ஹீத் ஜமாத் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக நேற்றைய தினம் மாதர்ஷ மாணவர்களுடைய பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு அய்யூபுல் அன்சாரி தலைமை வகித்தார். இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் அவர் உறையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


