சாத்தான்குளம் தச்சமொழி மீன்மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகள் இயங்கும் பகுதியில் கடந்த ஒரு மாதகாலமாக சாலை பணிகள் மற்றும் புதிதாக சாக்கடை நிறுவும் பணியும் நடைபெறுகிறது. இதனால் சாலைகளில் இருந்து வரும் தூசி புகை போல பரவி மக்களுக்கு சுவாச பிரச்சினை மற்றும் தொழில் செய்பவற்கு இடையுறாக பால்,மீன்,இறைச்சி மற்றும் மளிகை கடை ஆகியவற்றில் தூசிகள் குவியலாக படிந்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறது. சாலை ஒப்பந்ததாரர் தினமும் இரண்டு முறை சாலைகளில் தண்ணிர் தெளிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .மேலும் சாக்கடை பணி பாதியில் நிறுத்த பட்டு விட்டது இதனால் சாக்கடை நீர் புதிதாக கட்டப்பட்ட சாக்கடையில் தேங்கி அந்த பகுதியில் செல்பவர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு நாற்றம். மதுபானம் அருந்துபவர்கள் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில் மற்றும் பிளாஷ்டிக் பாட்டிலையும் தேங்கி நிற்கும் சாக்கடையில் வீசி செல்கின்றனர் இதனால் மேலும் இந்த இடம் மாசு பொதுமக்கள் கூறுகின்றனர்.


