தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுலைமான் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் தாஹா தீண்டாமைக்கு தீர்வு தான் என்ன என்கிற தலைப்பில் பேசினார். மாநில பொதுச்செயலாளர் அப்துல் கரீம் இந்தியர்கள் விரும்பும் இந்தியா எது என்கிற தலைப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
செய்துங்கநல்லூரில் உள்ள துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும். திருச்செந்தூர் – பாலக்காடு ரயிலை செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பூரில் நடந்து வரும் தொடர் வன்முறையால நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த கூட்டத்தில் பொது சிவில் சட்டம் கை விட வேண்டும், அப்பாவி ஆயுள் சிறைவாசிகளை தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை விரைவில் நிறைவேற்ற வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கிளை செயலாளர் கனி நன்றி கூறினார்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் தலைவர் அஸாருதீன், துணை தலைவர் நவாஸ், பொருளாளர் ரஷீத், துணை செயலாளர்கள் பரீத், தௌலத்துத்தாஹ், இம்ரான் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.


